மிலேனியம் உடன்படிக்கை தொடர்பான தங்களது தெளிவான நிலைப்பாட்டை அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
முன்னர் எதிர்கட்சியாகயிருந்தவர்களின் எம்..சி.சி உடன்படிக்கை குறித்த நிலைப்பாடு ஆளும்கட்சியானவுடன் மாறிவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் எம்.சி.சி உடன்படிக்கையை மீளாவும் செய்த உடன்படிக்கை குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்து அறிக்கையை பெற்றது.
இந்தக் குழு தேவையான திருத்தங்களை செய்ய முன்வராவிட்டால் அரசாங்கம் எம்.சி.சி உடன்படிக்கையை நிராகரிக்க வேண்டும் என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பிலும் அதில் காணப்படும் எதிர்மறையான விடயங்கள் தொடர்பிலும் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பிலும் அரசாங்கம் ஏன் மௌனமாக உள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.