போதைப்பொருள் சந்தேக நபரை கைது செய்ய சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழு நேற்று பண்டாரகம, அட்டலுகம பகுதியில் பெண்கள் உள்ளிட்ட ஒரு குழுவினரால் தாக்கப்பட்டிருந்தனர்.
இது குறித்த காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சிவில் உடையில் சென்ற பொலிஸ் அதிகாரிகளை பெண்கள் குழுவினர் தாக்கியுள்ளனர்.
அத்துடன், அந்த குழுவில் இருந்த பெண் ஒருவர் பொலிஸ் அதிகாரியின் கையை கடித்துள்ளார். இது குறித்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரை எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 15 வயதான சிறுமி ஒருவரும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் பண்டாரகம, அட்டலுகம, மாரவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



















