பெரும்போகத்திற்கு தேவையான உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கு 50 கிலோ கிராம் எடை கொண்ட உரம் ஆயிரத்து 500 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்கப்படுமென அமைச்சரவை இணைபேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.




















