வவுனியாவில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு இளைஞன் ஒருவர் தவற விழுந்து உயிரிழந்துள்ளார்.
வவுனியா சைவ வித்தியாசாலை பாடசாலையில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த போதே, தவறி விழுந்துள்ளார்.
அவருட்பட ஐந்து பேர் மட்டக்களப்பிலிருந்து வந்து வேலையில் ஈடுபட்டனர். கடந்த 30ஆம் திகதி வேலையிலீடுபட்டிருந்த போது, மரத்தடுப்பு உடைந்து மூவர் கீழே விழுந்தனர்.
படுகாயமடைந்த அவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் கடந்த 6ஆம் திகதி உயிரிழந்த நிலையில், இன்னொருவர் நேற்று உயிரிழந்தார்.
இருதயபுரத்தை சேர்ந்த பாலன் சசிக்குமார் (22) என்பவரே உயிரிழந்தார்.



















