ஈரானிய மல்யுத்த சம்பியன் நவித் அஃப்காரி இன்று சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டுள்ளார்.
2018 இல் நடந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது பாதுகாப்புக் காவலரைக் குத்திக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் தூக்கிலிடப்பட்டார் என்று அரச ஊடகங்கள் இன்று தெரிவித்தன.
“இன்று காலை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் வற்புறுத்தலின் பேரில் சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர்” அஃப்கரி தூக்கிலிடப்பட்டார் என தெற்கு ஃபார்ஸ் மாகாணத்தில் உள்ள நீதித்துறைத் தலைவரை மேற்கோளிட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த வழக்கு ஈரான் மீது சர்வதேச எதிர்ப்பை அதிகரித்தது. தவறான வாக்குமூலம் அளிக்கும்படி தான் சித்திரவதை செய்யப்பட்டதாக அஃப்காரி கூறியதாக அவரது குடும்பத்தினர் மற்றும் ஆர்வலர்கள் தெரிவித்தனர். அவரது குற்றத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவரது வழக்கறிஞர் கூறினார்.
ஈரானின் நீதித்துறை சித்திரவதை குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது.
85,000 விளையாட்டு வீரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய தொழிற்சங்கம் செவ்வாயன்று ஈரானை உலக விளையாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த மாதம் மல்யுத்த வீரரை தூக்கிலிட வேண்டாம் என்று ஈரானுக்கு அழைப்பு விடுத்தார்.



















