உலக டென்னிஸ் தரவரிசை நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச், யுஸ் ஓபன் லைன் நடுவரை தாக்கிய விவகாரத்தில் தொடரிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதற்காக ரோமில் உள்ள அவர், யுஎஸ் ஓபன் தொடர் மிகச்சிறந்த பாடத்தை தனக்கு கற்றுத் தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த சம்பவத்திலிருந்து மீளும்வகையில் உடலளவிலும் மனதளவிலும் தன்னை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யுஎஸ் ஓபன் 2020 தொடர் நியூயார்க்கில் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் நோவக் ஜோகோவிச் பங்கேற்று விளையாடிய நிலையில் 4வது சுற்றின் போது பந்தை பின்பக்கமாக அழுத்தமாக அடித்ததில், அங்கிருந்த லைன் நடுவரின் தொண்டையை பந்து பதம்பார்த்தது.
இச்சம்பவத்திற்கு பிறகு ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மட்டுமின்றி, தமது தவறிற்கு பகிரங்க மன்னிப்பும் கேட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, குறித்த சம்பவம் தமக்கு மிகப்பெரிய படிப்பினையை அளித்ததாக ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.



















