கர்ப்ப கால நீரிழிவு ஒரு பெண் தனது கர்ப்ப காலத்தில் சந்திக்கும் இயற்கையான நோய் தான்.
இயற்கையான கர்ப்பம் சார்ந்த உடல் இயங்குவியல் மாற்றங்களால் நீரிழிவு போன்ற தன்மை கர்ப்பிணித் தாய்களுக்கு ஏற்படுகிறது.
பெண்ணின் உடலில் உள்ள கணையம் சுரக்கும் இன்சுலின் எனும் ஹார்மோன், வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்காக நஞ்சுப்பை சுரக்கும் சில ஹார்மோன்களின் எதிர்வேலையால் சரியாக வேலை செய்யாமல் போவதால் தற்காலிகமாக நீரிழிவு போன்ற நிலை கர்ப்பிணிகளுக்கு வருகிறது.
இந்தசமயங்களில் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருப்பது அவசியம். குறிப்பாக உணவுகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
அந்தவகையில் கர்ப்பகாலத்தில் உண்டாகும் நீரிழிவு நோயைத்தவிர்க்க எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
- காலை உணவுக்கு பால், பழங்கள், உலர்ந்த பழங்கள் என எந்த இனிப்பு வகைகளையும் சாப்பிடாதீர்கள். முழு தானிய உணவு, புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
- ஒரே நேரத்தில் அதிக சாதம் சாப்பிடுவது குளுக்கோஸை அதிகரிக்கும். எனவே சாதத்தை குறைவாக சாப்பிடுகள்.
- வயிறு நிறைய காய்கறி, கீரை, பழ வகைகள் சாப்பிடுங்கள். அவ்வப்போது நட்ஸ் வகைகள் சாப்பிடலாம்.
- ஒவ்வொரு உணவின் போதும் எந்த அளவுக்கு கார்போஹைட்ரேட் , மாவுச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனியுங்கள்.
- உதாரணத்திற்கு 1 கப் சாதம், தானிய வகைகள், கிழங்கு வகைகள் சாப்பிடலாம் என ஒரு வேளை உணவுக்கு சாப்பிடலாம்.
- திணை வகைகள், தானிய வகைகள், பட்டானி, பருப்பு, ஓட்ஸ் என நார்ச்சத்து நிறைந்த உணவு
- களை நன்கு சாப்பிடுங்கள்.
- பிரெட் சாப்பிட்டாலும் கோதுமை பிரெட் சாப்பிடலாம். நார்ச்சத்து உணவுகளை சாப்பிடலாம்.
- பால் கால்சியம் சத்துக்கு தேவையானது. இது தாய்க்கு மட்டுமன்றி குழந்தையின் எலும்புகளுக்கும் உதவும். எனவே 1 கிளாஸ் பால் குடிப்பதே போதுமானது.
- ஒரு கப் பழ வகைகள் ஒரு வேளையில் சாப்பிடுவது நல்லது. சர்க்கரை கலந்த ஜூஸ் குடிப்பதை தவிருங்கள்.
- கேக், குக்கீஸ், சாக்லெட், கேண்டீ, ஸ்வீட் வகைகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம். இது இரத்தத்தில் சர்க்கரை அளவை சட்டென உயர்த்தும்.
- சர்க்கரை கலந்த பானங்கள், குளிர் பானங்கள் போன்றவற்றை முற்றிலும் தவிருங்கள். ஃபிரெஷ் ஜூஸாக இருந்தாலும் சர்க்கரை போடாமல் குடிக்கலாம்.