!!
1978 ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவத் தளத்திற்கு அருகில் விண்வெளி ஏலியன் சுட்டுக் கொல்லப்பட்டது என முன்னாள் அமெரிக்க விமானப்படை மேஜர் ஜார்ஜ் ஃபில்லர் கூறியுள்ளார்.
விருது பெற்ற புலனாய்வு நிருபர் ஜான் எல். குரேரா எழுதிய ‘Strange Craft: The True Story of an Air Force Intelligence Officer’s Life with UFOs’ என்ற புத்தகத்தில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜார்ஜ் ஃபில்லர் இச்சம்பவம் குறித்து விவரித்துள்ளார்.
புத்தகத்தின் விளக்கத்தின்படி, 1978 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி, டிக்ஸ் கோட்டையில் ஏலியன் ஒன்று சுடப்பட்டு, மெகுவேர் விமானப்படை தளத்தின் ஓடுபாதை முடிவில் கண்டுபிடித்தாக மூத்த மாஸ்டர் சார்ஜென்ட் ஃபில்லரிடம் கூறியுள்ளார்.
இது வேறொரு நாட்டைச் சேர்ந்த ஏலியனா? என்று ஃபில்லர் கேட்டுள்ளார். இல்லை, அது விண்வெளியில் இருந்து வந்தது, ஒரு விண்வெளி ஏலியன் என மூத்த மாஸ்டர் சார்ஜென்ட் பதிலளித்துள்ளார்.
ஏலியன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், UFO-க்கள் பைத்தியம் பிடித்த போல் சுற்றி ஒலிக்கத் தொடங்கினர் என்று ஃபில்லர் அதிகாரியிடம் கூறினார்.
ஃபில்லரின் கூற்றுப்படி, தனது காரின் அருகே மெல்லிய மற்றும் சாம்பல்-பழுப்பு நிற உயிரினத்தை கண்ட பொலிஸ் அதிகாரியால் ஏலியன் சுட்டுக் கொல்லப்பட்டது.
அந்த பொலிஸ் அதிகாரி ஏலியனை கையை உயர்த்தி அசையாமல் நிற்குமாறு கோரியுள்ளார், இதை கேட்க மறுத்த பின்னர் அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அந்த பொலிஸ் அதிகாரி மெகுவேர் விமானப்படை தளத்தைத் தொடர்பு கொண்டதை அடுத்த, ஒரு சிறப்பு குழு சம்பவ இடத்திற்கு வந்து ஏலியனின் உடலை ஓஹியோவில் உள்ள ரைட்-பேட்டர்சன் விமானப்படை தளத்திற்கு கொண்டு சென்றது.
உளவுத்துறை அறிக்கைக்காக சாட்சிகளுடன் பேசவும் சம்பவத்தின் புகைப்படங்களைப் பார்க்கவும் கோரிக்கையை தாக்கல் செய்ததாக ஃபில்லர் கூறுகிறார், ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.