வாழைப்பழம் நமக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கிறது என்பது தெரியும்.
ஆனால் வாழைப்பழ தோல் அதை விட நன்மை அளிக்கக் கூடிய ஒன்று என்பது தெரியுமா. ஆமாங்க இதுவரை நீங்கி தூக்கி எறிந்த வாழைப்பழ தோலில் இருக்கும் நன்மைகளை பற்றி தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்.
வாழைப்பழ தோலில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், ஆன்டி பயாடிக் பொருட்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்றவை அதிகளவில் உள்ளன.
எனவே வேஸ்ட் என நினைக்கும் இந்த வாழைப்பழ தோலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என அறிந்து கொள்வோம்.
- வாழைப்பழ தோலில் பழத்தில் இருப்பதை விட அதிகளவு நார்ச்சத்து காணப்படுகிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை தவறாமல் எடுத்து வரலாம்.
- வாழைப்பழத்தில் டிரிப்டோபன் என்ற வேதிப்பொருள் நிரம்பியுள்ளது. இது உங்களுக்கு ரிலாக்ஸான தூக்கத்தை தரும்.
- உங்க பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை சமநிலையில் வைத்து கொள்ள வாழைப்பழ தோல் உதவி புரிகின்றது.
- தினமும் வாழைப்பழத்தின் தோலை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். உங்க நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
- சரும ஆரோக்கியம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வாழைப்பழத் தோலில் அதிக அளவில் இருக்கின்றன.
- வாழைப்பழ தோல்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது. எனவே இந்த தோல் நம்முடைய தோல் பிரச்சினைகளை விரட்ட பயன்படுகிறது.
- சோரியாஸிஸ், எரிச்சல், பூச்சிக் கடி, சரும வடுக்கள், சரும சுருக்கம் போன்றவற்றை போக்கி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- வாழைப்பழ தோல்களில் லுடீன் உள்ளது. இது இரவு பார்வைக்கு மிகவும் முக்கியமானது.
- கண்களில் ஏற்படும் மாகுலார் சிதைவை தடுக்கிறது. அதனால் உங்களுடைய உணவோடு தினமும் ஒரு வாழைப்பழமாவது எடுத்துக் கொள்வது நல்லது.