இந்தியாவில் கொவிட்-19 காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 85 பேர் உயிரிழந்தனர்.
இதற்கமைய, இந்தியாவில் கொவிட்-19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 20 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 83 ஆயிரத்து 347 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி, கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 56 இலட்சத்து 46 ஆயிரத்து 11 ஆக உயர்வடைந்துள்ளது.
89 ஆயிரத்து 746 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45 இலட்சத்து 87 ஆயிரத்து 614 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு பாகங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் 9 இலட்சத்து 68 ஆயிரத்து 377 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.




















