தமிழகத்தில் திருமணமான பெண்ணிடம் நெருங்கி பழகி, அதன் பின் அவரை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞனைப் பற்றி பிரபல தமிழ் ஊடகமான நக்கீரனில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரை நாவினிப்பட்டியை சேர்ந்தவர் ரத்தினகுமார். கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை முகப்பேரில் உள்ள ஆய்ஷா மற்றும் அவரின் கணவர் ஆகியோர் இணைந்து நடத்தி வந்த பிரபல இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ்வாக சேர்ந்துள்ளார்.
அப்போது ஆய்ஷாவிடம் அவரின் கணவர் பணி நிமித்தம் காரணமாக அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக்கி கொண்ட ரத்தினகுமார், ஆயிஷாவிற்கு ஆறுதல் சொல்வது போன்று நட்பாக பழகி வந்துள்ளார்.
அதன் பின் இவர்களுக்கிடையே நடந்த சம்பவம் குறித்து அப்பெண், ஆயிஷா கூறுகையில், என்னுடைய சொந்த ஊர் அந்தமான். நானும், என் கணவரும் ஒரே பீல்டில் இருந்ததால், காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.
இருவருமே வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இருவரின் வீட்டிலும் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் என்னுடைய கணவர் தான் இரண்டு இன்சூரன்ஸ் சேவை நிறுவனங்களை துவங்கினார்.
அதில் ஒரு நிறுவனத்தில் என்னை உரிமையாளராகவும், மற்றொரு நிறுவனத்தில் நானும், அவரும் உரிமையாளராகவும் இருந்தோம்.
கம்பெனியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக வேண்டும் என்பதற்காக உழைத்து கொண்டே இருந்தோம். கம்பெனி விஷயம் தொடர்பாக எனக்கும், கணவருக்கும் அடிக்கடி சண்டை வரும்.
எங்களுக்குள் நடந்த சண்டைகளை பயன்படுத்தி கொண்ட ரத்தினகுமார், எனக்கு ஆறுதல் சொல்வது போல், நட்பாகினான்.அவனுடைய கடந்த வாழ்க்கையைப் பற்றி என்னிடம் நிறைய சொன்னான்.
அதாவது, சுதா என்கிற பெண்ணை காதலித்ததாகவும், அவளிடம் மிகவும் கெஞ்சி கெஞ்சி காதலித்ததால், அவள் என்னை உதாசீனப்படுத்தி போய்விட்டாள், அதன் பின் என்னிடம் பழகிய சில பெண்கள் நான் கெஞ்சுவது பிடிக்காமல் விட்டு சென்றுவிட்டதாக அனுதாபத்தை உருவாக்கினான்.
அப்போது தான் நான் தெரியாமல் என்னுடைய பழைய காதல் பற்றி அவனிடம் சொல்லிவிட்டேன். ஒரு கட்டத்தில் என்னை காதலிப்பதாக கூறிய அவன், நீ மட்டும் என்னிடம் தொடர்ந்து பேசவில்லை, சேட் செய்யவில்லை என்றால், என்னுடைய பழைய காதலை கணவனிடம் கூறிவிடுவேன் என்று மிரட்டினான்.
என்னுடைய கணவர் கோபக்காரர், இந்த விஷயம் அவருக்கு தெரிந்தால், வீட்டை விட்டே துரத்திவிடுவார், சொந்த வீட்டிற்கும் செல்ல முடியாது, இந்த நெருக்கடி காரணமாக அவனிடம் வேறு வழியின்றி காதலிப்பது போன்று சேட் செய்ய ஆரம்பித்தேன்.
அதன் பின் நான் சொல்வதை தான் கேட்கனும் என்று என்னிடம் ஒரு சைக்கோ மாதிரி நடந்து கொண்டான். ஒரு கட்டத்தின் போது, நீ என்னிடம் சேட் செய்த அனைத்தையும் உன் கணவனிடம் சொல்லிவிடுவேன், இதனால் நீ ஒரு முறை உடை இல்லாமல் நிர்வாண புகைப்படத்தை அனுப்பு, அதன் பின் நான் எதுவும் செய்யமாட்டேன் என்று கூறினான்.
நான் முடியாது என்ற போது, முகம் தெரியாமல் கழுத்துக்கு கீழே மட்டும் அனுப்பு என்று கூறினான். வேறு வழியின்றி போட்டோ எடுத்து அனுப்பினேன், ஆனால் அவன் வீடியோ வேண்டும் என்று கேட்டான்.
அதோடு நிறுத்தாமல், என்னுடைய முன்னாள் காதலனை வீட்டிற்கு அழைத்து அவனுடன் நெருக்கமாக இருக்க வேண்டும், அதன் பின் அந்த புகைப்படத்தை எனக்கு அனுப்பு என்று மிரட்டினான்.
வேறு வழியில்லாமல் முட்டாள்தனத்துடன் அதையும் செய்தேன். ரத்தினகுமார், ஆயிஷாவிடம் சேட்டில் பேசியது, அவர் அனுப்பிய நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் மெயிலில் சேமித்து வைத்துள்ளான்.
ஆயிஷாவிடம் எல்லாவற்றையும் நீக்கிவிட்டதாக பொய் கூறியுள்ளான். ஆனால் அதன் பின் ஆயிஷாவின் கணவரிடம் உன் மனைவியின் அந்தரங்க புகைப்படங்கள் இருக்கிறது என்று அவரை மிரட்ட திட்டமிட்டுள்ளான் ரத்தினகுமார்.
மேலும், ஆயிஷாவே இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உரிமையாளராக இருப்பதால், மற்றவர்களுக்கு வந்த இன்சூரன்ஸ் பணத்தினை, தன்னுடைய பெயருக்கு போடும் படி வற்புறுத்தியிருக்கிறான். அதுமட்டுமின்றி இனிமேல் நீ உன் கணவனுடன் நெருக்கமாக இருக்க கூடாது, அடுத்த குழந்தை உனக்கும், எனக்குமாகவே இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான்.
இதற்கு ஆயிஷா ஏற்றுக் கொள்ளாததால், ரத்தினகுமார் உன்னுடைய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் என்னுடைய நண்பர்களிடம் இருக்கிறது. நான் யாரிடம் எல்லாம் சொல்கிறேனோ அவர்களிடம் எல்லாம் நீ நெருக்கமாக இருக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளான்.
திடீரென்று ஒருநாள் கணவர் இல்லாத நேரத்தில், ரத்தின குமார் தன்னை அனுப்பியதாக நபர் ஒருவர் நுழைந்து அவரிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளான்.
இதனால் இதற்கு மேலும் விட்டாள், வேறு மாதிரி ஆகிவிடும் என்று கூறி, தன் காதல் கணவரிடம் அதன் பின் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறியுள்ளார்.
ரத்தினகுமாரின் லேப்டாப் மற்றும் செல்போன்களை ஆராய்ந்த போது 1000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சிய்டைந்துள்ளார்.
இதை எல்லாம் தெரிந்தும், தன்னுடைய குழந்தைகளுக்காக அவரை மன்னித்து ஏற்றுக் கொண்ட கணவன், காவல்நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் ரத்தினகுமார், பொய்யான புகார்(ஆயிஷாவின் கணவர் லேப்டாப் போன்றவைகளை திருடிவிட்டார்) போலி முகவரியில் கொடுத்து ஆயிஷாவின் கணவரை மிரட்டி வந்துள்ளான்.
அதன் பின் ஜே.ஜே.நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் இந்த சம்பவம் குறித்து விசாரித்த பின்னர் உண்மை என்ன என்பது தெரியவர, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இப்படி வழக்கு சென்று கொண்டிருந்த போது, உமா மகேஷ்வரி என்கிற இன்ஸ்பெக்டர் இந்த வழக்கு விஷயத்தில் உள்ளே நுழைய வழக்கு, ஆயிஷாவிற்கு எதிராக திரும்பியுள்ளது. எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யாமல், கட்டப்பஞ்சாயத்து செய்வதில் குறியாக இருந்து வந்துள்ளார்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியை பார்க்க சொல்ல, ஆனால் அவரும் எந்த வித நடவடிக்கையும், எடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இவ்வளவு பெரிய பாலியல் புகாருக்கு எப்.ஐ.ஆர் கூட போடாமல், எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு என்ன காரணம்? இது குறித்து இன்ஸ்பெக்டர் உமா மகேஷ்வரியை கேட்ட போது, விசாரணையில் உள்ளது என்று மட்டும் கூறிவிட்டு, அதற்கு மேல் பேச மறுத்துள்ளார்.
ரத்தினகுமாரை தொடர்பு கொண்ட போது, போன் ஸ்விட்ச் ஆப்பில் இருந்துள்ளது. மேலும் பழகும் பெண்களை பிளாக் மெயில் செய்து, அவர்களை வைத்து ஆபாச படம் எடுத்து, அதை பல ஆண்களுக்கு விருந்தாக்க முயற்சித்துள்ளான் இந்த ரத்தினக் குமார்.
இவனிடம் இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தையும் ஆபாச தளத்தில் பதிவேற்றியிருக்கன? வேறு யாருக்காவது அனுப்பி இருக்கானா? இவனுக்கு பின்னால் யார் யார் எல்லாம் இருந்து கொண்டு இப்படி செய்கிறான் என்பதை பொலிசார் விசாரிக்க வேண்டும், இல்லையெனில் இது போன்ற பாலியல் கொடூரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.