ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் காயம் காரணமாக விளையாடாத அம்பத்தி ராயுடு மேலும் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். 13 ஆவது சீசன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சுப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. இப்போட்டியில் அம்பத்தி ராயுடு 48 பந்துகளில் 71 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
ஆனால், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிராக போட்டியில் காயம் காரணமாக அம்பத்தி ராயுடு இடம் பெறவில்லை. இந்நிலையில் மேலும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளிலும் விளையாட வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே முரளி விஜய், ஷேன் வொட்சன் திணறி வரும் வரும் நிலையில் அம்பத்தி ராயுடு இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.
சென்னை சுப்பர் கிங்ஸ் நாளைய தினம் தனது 3 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.



















