அயல் நாடுகளுடனான கொள்கையில் ஸ்ரீலங்காவுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் காணொளி ஊடான உச்சி மாநாடு இன்று இடம்பெற்றது. இதன் போதே பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை.
அண்டை நாடுகளுக்கு முதலிடம் என்ற இந்திய அரசாங்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாட்டின் படி, விற்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
சில பொருட்களின் இறக்குமதிக்கு இலங்கை விதித்துள்ள தற்காலிக கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும். இதன் மூலம் ஸ்ரீலங்கா பொருளாதாரத்திற்கும் பொதுமக்களுக்கும் அதிக பயன் கிடைக்கும்.
இதேவேளை இந்தியாவுடன் பௌத்த மத ரீதியிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானிய உதவி வழங்கப்படும் என இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.