பிரித்தானிய மகாராணியாருக்கு எதிராக அரண்மனை ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், அவர் கடுங்கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதற்கு முன் மகாராணியாரின் கொரோனா வட்டத்தில் (Covid bubble) இருப்பதற்காக, அரண்மனை ஊழியர்கள் சுமார் 20 பேர் தங்கள் குடும்பங்களை விட்டு விட்டு Sandringham எஸ்டேட்டில் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால், தங்கள் குடும்பங்களைப் பிரிந்து, நான்கு வாரங்கள் தொடர்ந்து Sandringham எஸ்டேட்டில் இருக்க வேண்டும் என்பதால், அந்த ஊழியர்கள் மகாராணியாரின் உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதனால், வேறு வழியின்றி 33 ஆண்டுகளில் முதன்முறையாக மகாராணியார் Sandringham எஸ்டேட்டுக்கு பதிலாக தனது விண்ட்சர் மாளிகையிலேயே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மகாராணியார் கடுங்கோபத்தில் இருப்பதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுவரை பொறுத்ததெல்லாம் போதும், இதற்கு முன்பெல்லாம் இப்படி இருந்ததில்லை என அரண்மனை ஊழியர்கள் கூறிவிட்டதாக தெரிகிறது.
எல்லாருக்கும் மகாராணியாருக்கு உண்மையாக இருக்கவே விருப்பம், என்றாலும், கிறிஸ்துமஸ் காலகட்டத்திலும் தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்து தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கூறுவதெல்லாம் ’டூ மச்’ என ஊழியர்கள் கருதுகிறார்கள்.
மகாராணியாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஊழியர்களில் அரண்மனை சுத்தம் செய்பவர்கள், துணி துவைப்பவர்கள் மற்றும் பராமரிப்புப் பணியாளர்களும் அடக்கம்.