கனடாவில் கொரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கியூபெக் மாகாணத்தின் மூன்று பிராந்தியங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மாண்ட்ரீல், கியூபெக் சிட்டி மற்றும் Chaudiere-Appalaches ஆகிய மூன்று பிராந்தியங்களில் கோவிட் -19 நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தியது.
இந்த ‘சிவப்பு மண்டலங்களில்’ அக்டோபர் 1 முதல் 28 நாட்களுக்கு பார்கள், கச்சேரி அரங்குகள், சினிமாக்கள் மற்றும் நூலகங்கள் மூடப்படுவது நடைமுறைக்கு வரும் என்று மாகாண தலைவர் பிராங்கோயிஸ் லெகால்ட் கூறினார்.
கடைகள் திறந்த நிலையில் இருக்க முடியும், ஆனால் உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்படும் மற்றும் பள்ளிகளும் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு வழக்குகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை நாம் காண்கிறோம் மற்றும் எதிர்வரும் வாரங்களில் மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கிறோம், நிலைமை இப்போது மோசமானதாக உள்ளது. என்று லெகால்ட் கூறினார்.
முகக் கவசம் அணிவது மற்றும் சமூகக் கூட்டங்களை கட்டுப்படுத்துவது குறித்து தற்போதுள்ள விதிகள் இருந்தபோதிலும், கியூபெக் மாகாணத்தில் திங்களன்று 750 புதிய வழக்குகளை பதிவானது.
இதை பொது சுகாதார அதிகாரிகள் தொற்றுநோயின் ‘இரண்டாவது அலை’ என்று குறிப்பிட்டனர்.
ஆனால் மாகாணத்தில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு பூஜ்ஜியத்திற்கும் ஆறுக்கும் இடையில் குறைவாகவே உள்ளது.