ஜேர்மனியின் Bielefeld நகரில் ஒரு குடும்பம் நடத்திய பார்ட்டியால் ஏராளமான இளைஞர்கள் கொரோனா தனிமைப் படுத்துதலுக்கு உட்படுத்தப்பட உத்தரவிடப் பட்டுள்ளார்கள்.
இந்த பார்ட்டியில் பெருமளவில் மாணவர்கள் பாதிக்கப்பட்டதால் 10 பள்ளிகளுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த பார்ட்டியில் மொத்தம் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதும் சரியாகத் தெரியாத நிலையில் கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி தனிமைப்படுத்தப் படுதலுக்கு செல்ல வேண்டியவர்கள் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்தது.
அத்துடன் இன்னும் பலருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகாததால், அவையும் வந்த பின் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, திருமணம் முதலான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என மாகாண கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 1 முதல் 50 பேர் அல்லது அதற்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு முன்பே, உள்ளூர் பொது ஒழுங்கு அலுவலகங்களில்பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.