தமிழகத்தில் மேலும் 5 ரயில்ளை இயக்க ரயில்வே அமைச்கம் அனுமதியளித்துள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ரயில் சேவைக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக ஷராமிக் ரயிகல்கள் இயக்கப்பட்டன. இதை தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படிப்படியாக சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் முதற்கட்டமாக 13 ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 7 முதல் ரயில் சேவை தொடங்கியது. சென்னையில் இருந்து கோவை, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது மேலும் 5 ரயில்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,
➤12631/32 சென்னை எழும்பூர் – திருநெல்வேலி – சென்னை எழும்பூர்
➤22661/62 சென்னை எழும்பூர் – செங்கோட்டை – சென்னை எழும்பூர்
➤22671/72 சென்னை எழும்பூர் – மதுரை- சென்னை எழும்பூர்
➤22661/62 சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர்
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு இயங்கும் ரயில்கள்:
➤22639/40 சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல் – சென்னை சென்ட்ரல்
➤16723/24 சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் சென்ட்ரல் – சென்னை எழும்பூர்
➤16187/88 காரைக்கால்- எர்ணாகுளம் – காரைக்கால்
ஆன்லைன் மூலமாகவே டிக்கெட் முன்பதிவு மேற்கொள்ளப்படும் என்றும், ரயில் நிலையங்களில் டிக்கெட் தரப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், உள்ளிட்ட நோய் தடுப்பு வழிமுறைகளின் படியே ரயில்கள் இயக்கப்பட உள்ளன.