சுற்றுச் சூழல் அழிக்கப்படுவது தொடர்பாக தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பெரியளவில் சுற்றுச் சூழலை அழித்துள்ளதாக கூறப்பட்டுள்ளதாகவும் இதனால் விவாதத்திற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுப்பதாகவும் சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இவை முற்றிலும் பொய்யானவை.
எந்த சம்பவமாக இருந்தாலும் தன்னால் சாட்சியங்களுடன் ஒப்புவிக்க முடியும் எனவும் அமரவீர கூறியுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கத்தை அவமதிப்புக்கு உள்ளாக்க எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டு சம்பந்தமாக எந்த விவாதத்திற்கும் வர தயார் எனவும் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.