இன்று முதல், பதிவு செய்யப்படாத புதிய மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து சிம் அட்டைகளும் இன்று முதல் இரத்து செய்யப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து மொபைல் போன்களை தனிப்பட்ட பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தவர்கள் தங்கள் சாதனங்களை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலைத்தளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே புதிய சாதனங்களை வாங்க ஆணைக்குழு பொதுமக்களைக் கோருகிறது.
எந்தவொரு மொபைல் தொலைபேசியின் பதிவையும் உறுதிசெயு்யு, அதன் 15 இலக்க IMEI எண்ணை 1909 க்கு அனுப்பபுவதன் மூலம், உறுதி செய்து கொள்ளலாம்.
தரமற்ற தொலைபேசிகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டி.ஆர்.சி.எஸ்.எல் கூறியது.
பதிவு செய்யப்படாத அனைத்து சாதனங்களையும் எதிர்காலத்தில் செயலிழக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது குறிப்பிட்டது.


















