20 வது திருத்த வரைவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான மேலதிக பரிசீலிப்பு நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
இரண்டாவது நாளான, நேற்று மாலை வரை இடம்பெற்ற சமர்ப்பிப்புக்களை தொடர்ந்து, நாளை வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 32 மனுதாரர்கள் சார்பாக சமர்ப்பிப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரிய மற்றும் நீதிபதிகள் புவனேக அலுவிஹர, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜெயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் குழு முன் பரிசீலிக்கப்பட்டன.
மனுக்கள் செவ்வாய்க்கிழமை முதல் முறையாக பரிசீலிக்கப்பட்டன. மேலும் மனுதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் தங்கள் சமர்ப்பிப்புகளை முன்வைத்தனர்.
ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற குழு, மனுக்களின் பரிசீலிப்பை நாளைக்குள் முடிக்கும் என எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது.
முன்மொழியப்பட்ட வரைபை முழுமையாகவோ அல்லது பகுதியாவோ சர்வசன வாக்கெடுப்பிற்குட்படுத்த வேண்டும் மற்றும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்றும் அறிவிக்க மனுதாரர்கள் கோரியுள்ளனர்.


















