சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளின் அமைப்பினரால் இப் பேரணி இன்றைய தினம் யாழ். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப் பேரணியின் நிறைவில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே, இராணுவத்தினரால் கடத்தப்பட்ட எம் சிறுவர்கள் எங்கே போன்ற கோஷங்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


















