முச்சக்கர வண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துச் செல்லும் போது ஒலுவில் பகுதியில் வைத்து இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த தகவல்களின் பேரில் அக்கரைபற்று காவல்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 25 கிராம் ஹெரோயின் மற்றும் ரூ. 19,000 ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள், 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் பாலமுனை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.



















