ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியின் போது தடுமாறியது ஏன் மற்றும் அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து சென்னை அணியின் தலைவர் டோனி விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதின.
இதில் ஹைதராபாத் அணி 164 ஓட்டங்கள் குவித்தது. அதன் பின் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் குவித்து, 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
டோனி கடைசி வரை களத்தில் இருந்தும் சென்னை அணி தோல்வியை சந்தித்து, சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் டோனி கடும் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார்.
இதனால் அவர் தடுமாறியது அப்படியே தெரிந்தது.
இது குறித்து டோனி கூறுகையில், இங்கு வெப்பம் அதிகமாக இருக்கிறது. தொண்டை எளிதில் வறண்டு விடுகிறது. அதனால், இருமல் அடிக்கடி ஏற்பட்டது. என்னால் நிறைய பந்துகளை எதிர்கொள்ள முடியவில்லை.
மைதானம் மந்தமாக இருக்கும்போது நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியம். நீண்ட காலத்திற்கு பிறகு தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறோம். நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
https://twitter.com/ChennaiIPL/status/1312092767854555137