கையில் சரக்கு கிளாஸுடன் குடி போதையில் முன்னாள் காதலரை அணைத்தப்படி பிரபல நடிகை தள்ளாடியபடி செல்லும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா.
ரஜினிக்காந்த், கமல், அஜித், விஜய், தனுஷ். விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகை த்ரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் ஒருவரை ஒருவர் காதலித்தது ஊர் அறிந்த விஷயம். பல ஆண்டுகள் காதல் உறவில் இருந்த அவர்கள், பின்னர் மனக்கசப்பு காரணமாக பிரிந்தனர். அதன்பிறகும் நட்பை தொடர்ந்து வந்தனர் இருவரும்.
பிறந்த நாள் என்றால் வாழ்த்து சொல்லிக்கொள்வது என்ற மட்டத்திலேயே இருந்தது அவர்களின் நட்பு. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ராணா தனது காதலியான மிஹீகா என்பவரை அண்மையில் திருமணம் செய்துக் கொண்டார்.
லாக்டவுன் நேரத்தில் பல கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது அவர்களின் திருமணம். இந்நிலையில் நடிகை த்ரிஷாவும் ராணாவும் காதலித்த காலத்தில் எடுத்த போட்டோக்கள் திடீரென வைரலாகி வருகிறது. இருவரும் காதல் உறவில் இருந்தபோது அடிக்கடி ஒன்றாக பார்ட்டிகளில் பங்கேற்பார்கள்.
அப்படி பார்ட்டியில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த போட்டோக்களில் கையில் சரக்கு கிளாஸுடன் நடக்கவே முடியாமல் காதலர் ராணாவை அணைத்தப்படி தள்ளாடிக் கொண்டிருக்கிறார் த்ரிஷா.