உலகில் உள்ள கொடிய நோய்களுள் புற்றுநோய்க்கு அடுத்தப்படியாக சக்கரை நோய் உள்ளது. இதனை ஆரம்பத்திலே கண்டறிந்துவிட்டால் சரி செய்து விடலாம்.
அதிலும் சர்க்கரை நோய்க்கு அதிக நார் மற்றும் புரத சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிலும் சில பாரம்பரிய மூலிகைகள் நமது உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றன. இதில் வேப்ப இலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இன்சுலின் அல்லாத சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அறிகுறிகளை கட்டுப்படுத்த வேப்ப இலை பெருமளவில் பயன்படுகிறது.
சாதரணமாக வேப்ப இலைகளை மென்றே சாப்பிட்டு விடலாம் அல்லது அவற்றை கொண்டு தேநீர் செய்யலாம். இது சக்கரை நோயை கட்டுப்படுத்த உதவி புரிகின்றது.
அந்தவகையில் தற்போது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேப்ப இலை எப்படி பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- 1 டீஸ்பூன் வேப்ப இலை தூள்
- ஒன்றரை கப் தண்ணீர்
- அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள்
செய்முறை
வேப்ப இலை தூள் மற்றும் இலவங்கப்பட்டை தூள் இரண்டையும் தண்ணீரில் வேகவைக்கவும்.
பிறகு அதில் சிறிது டீ தூள் கலந்து கொள்ளவும். இந்த பானம் கசப்பானது என்றாலும் தேநீர் வாசத்திற்காக தேயிலை தூள் சேர்க்கப்படுகிறது.
இதை தேநீர் போல சாப்பிட விரும்புவோர் இந்த பானத்தில் சிறிது சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம் ஆனால் அதனால் கசப்பு சுவை மாறப்போவதில்லை.
ஆனால் உங்கள் அன்றாட வாழ்க்கையில் எந்த வகையான மருந்துகளையும் எடுத்துக் கொள்வதற்கு முன்பு ஒருமுறை மருத்துவரை ஆலோசிப்பது நல்லது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.