பிரான்ஸின் தெற்கு பகுதியில் மற்றும் இத்தாலியின் வடமேற்கு பகுதியில் வீசும் அலெக்ஸ் புயல் காரணமாக 2 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன் இந்த புயல் காரணமாக சுமார் 25 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புயலுடன், அங்கு கனமழையும் பெய்து வருவதனால் வீதிகள் மற்றும் மக்கள் குடியுருப்பு தொகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அதேநேரம், பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 450 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், 100 வீடுகள் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதற்கும், காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் மீட்பு பணியாளர்கள் ஈடுப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன.