பிரித்தானியாவில் சாலையில் வேகமாகச் சென்ற லொறியிலிருந்து விழுந்த மூட்டைகளைக் கைப்பற்றிய பொலிசார் அவற்றிலிருந்த பொருளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வட அயர்லாந்தில் நெடுஞ்சாலை ஒன்றில் சென்றுகொண்டிருந்த லொறி ஒன்றிலிருந்து மூட்டைகள் சில சாலையில் விழுந்துள்ளன.
அவற்றை கைப்பற்றிய பொலிசார் அதற்குள் கஞ்சா இருப்பதைக் கண்டறிந்தனர். அந்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் ஒரு மில்லியன் பவுண்டுகளாகும்.
சமீபத்தில்தான் பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் போதைப்பொருள் உட்கொண்டு உயிரிழந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அளவு போதைப்பொருள் நாட்டிற்குள் சென்றிருந்தால், பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என பொலிசார் கருதுகிறார்கள்.
பெரிய போதை கும்பல் ஒன்றிற்கு இந்த கஞ்சா கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என கருதும் பொலிசார், அந்த லொறி மற்றும் அதிலிருந்தோரை தேடி வருகிறார்கள்.