திவுலுப்பிட்டியவில் 1500 பாடசாலை மாணவர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா நோயாளி என அடையாளம் காணப்பட்டுள்ள 16 வயதுடைய மாணவி, கல்வி கற்க சென்ற பாடசாலையை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா திவுலப்பிடிய பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண்ணுடன் தொடர்புகளை பேணிய மேலும் 400 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தற்போது 69பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் திவுலப்பிடியவில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகளுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினால், தற்போது பாடசாலை மாணவர்கள் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3471 அதிகரித்துள்ளது. இதில் 200பேர், வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.