பொதுவாக காலநிலை மாற்றம் ஏற்படும் பொழுது தொற்றுக்கள் பரவுவது வழக்கம்.
அதன்படி, குளிர்காலங்கள் ஆரம்பிக்கும் பொழுது நுளம்புகளால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
அதில், ஒன்றாக சிக்குன்குனியா நோய் பார்க்கப்படுகின்றது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாள் முழுவதும் எலும்புகள் மற்றும் தசைகளில் வலியை உணர முடியும்.
சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வருடத்திற்கு அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்க வேண்டும். காலங்கள் கடந்த பின்னர் நோய் நிலைமை தீவிரமடைந்து பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சிக்குன்குனியா நோயிலிருந்து வெளியில் வர நினைப்பவர்கள் முதலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உணவுகளை தினமும் எடுத்து கொள்வது அவசியம்.
அந்த வகையில் சிக்குன்குனியா பற்றிய போதியளவு விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சிக்குன்குனியா நோயின் அறிகுறிகள்
1. மூட்டுவலி:
கீல்வாதம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மணிக்கட்டு, கைகள், கணுக்கால், தோள்கள் மற்றும் முழங்கால்கள் வளரும் பொழுது வலி இருக்கும். நோயாளி சிறிய உடல் செயல்பாடுகளுடன் சில குறைப்புகளுடன் காணப்படலாம். இப்படியான நேரங்களில் காலையில் எழுந்தவுடன் மோசமான விளைவுகளை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மூட்டுவலியால் பாதிக்கப்பட்ட நபருக்கு சிக்குன்குனியா நோய் இருந்தால் அவர்களின் தசைநார்கள் வீக்கம் அடைந்து காணப்படும்.
2. அதிக காய்ச்சல்:
பொதுவாக மழைக்காலங்களில் பரவும் நோய்த்தொற்றுக்களுக்கு காய்ச்சல் தான் ஆரம்ப அறிகுறியாக இருக்கும். சிக்குன்குனியால் பாதிக்கப்பட்டவரின் உடல் வெப்பநிலை பெரும்பாலும் 102 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இந்த காய்ச்சல் ஒரு வாரம் முழுவதும் அல்லது குறைந்தது மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்.
3. தலைவலி:
சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தலைவலியால் அவஸ்தைப்படுவார்கள். இது குறிப்பிட்ட நாட்களுக்கு அல்லாமல், மாதக்கணக்களுக்கு நீடிக்கும். இப்படியான நேரங்களில் உடனடியாக மருத்துவரை சந்தித்து உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
4. சிவந்த கண்கள்:
பொதுவாக கான்ஜுன்க்டிவிடிஸ் எனப்படுவது கண்களுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் சிக்குன்குனியா போன்ற நோய்தொற்று காரணமாக கண்கள் சிவப்பாக காணப்படலாம்.
5. தடிப்புகள்:
சிக்குன்குனியா நோயாளிகளில் சுமாராக 40% நோயாளர்கள் தடிப்பு பிரச்சினையால் அவஸ்தைப்படுகிறார்கள். மாகுலோபாபுலர் அல்லது மோர்பிலிஃபார்ம் போன்ற வெடிப்புக்கள் பொதுவான வகையாக பார்க்கப்படுகின்றது.
இவற்றை எல்லாம் விட சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் மேல் கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவை ஏற்பட்டு மூன்று முதல் நான்கு நாட்களில் மறையாமல் இருந்தால் உரிய மருத்துவரை பார்ப்பது நல்லது.
6. இரத்தப்போக்கு:
நோய்த்தொற்று காரணமாக பெரும்பாலானவர்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படலாம். இப்படியான அறிகுறிகளை காய்ச்சலுடன் நீங்கள் உணர்ந்தால் யோசிக்காமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
சிக்குன்குனியா சிறுவர்களுக்கு இருந்தால் அவர்களுக்கு சற்று வேறுவிதமான அறிகுறிகளை காட்டும்.
வயிற்றுப்போக்கு
வாந்தி
ரெட்ரோ ஆர்பிட்டல் வலி (கண்ணுக்கு பின்னால் வலி)
மூளைக்காய்ச்சல் நோய்க்குறி
சிக்குன்குனியாவை கட்டுபடுத்தும் வழிமுறை
1. தோல் மற்றும் ஆடைகளில் பூச்சிகள் இருப்பதை அவதானித்தால் அவற்றை விரட்டியடிப்பதுடன், மீண்டும் ஒரு முறை கழுவி விட்டு பயன்படுத்த வேண்டும்.
2. காலநிலை மாற்றங்களின் போது உடலை முழுமையாக மூடும் ஆடைகள் அணிவது அவசியம்.
3. பொதுவாக சிலர் மழைக்காலங்களில் வெளியில் செல்வது மற்றும் மற்றவர்களை நமது வீடுகளுக்கு அழைத்து உணவளிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். இதனால் கூட தொற்றுக்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே குளிர்காலங்களில் வீட்டில் இருப்பது சிறந்தது.
4. தொற்றுநோய்கள் ஏற்படும் பகுதிகளுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அத்துடன் சிறுவர்களை அந்த பகுதிக்கு கொண்டு செல்லவே கூடாது.
சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
1. தேங்காய் நீரில் உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கும் தன்மை உள்ளது. இது காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். அதோடு, உடலின் நீரேற்றத்தை பராமரிக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை வரை தேங்காய் நீர் எடுத்து கொள்ளலாம்.
2. பச்சை காய்கறிகள் மற்றும் இலைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மூட்டு வலியை கட்டுக்குள் வைப்பதுடன் நோயை எதிர்த்துப் போராடவும் உதவியாக இருக்கின்றது. பச்சை காய்கறிகளில் அதிக வைட்டமின் ஏ சத்துகள் உள்ளன இது சிக்குன்குனியாவால் ஏற்படும் வலிகளை குறைக்கும் தன்மை கொண்டது.
3. சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டில் தயாரிக்கும் காய்கறி சூப்களை கொடுக்கலாம். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். வைட்டமின் ஏ நிறைந்த கேரட் சூப், வைட்டமின் சி நிறைந்த தக்காளி சூப் ஆகியவற்றை அடிக்கடி உணவாக கொடுக்கலாம். அத்துடன் ப்ரோக்கோலியில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. இதனால் சூப் செய்து குடிக்கலாம்.
4. சிக்குன்குனியா நோயாளிகளுக்கு இரத்த பிளேட்லெட் எண்ணிக்கை விரைவாக வீழ்ச்சியடையும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனை மேம்படுத்த பப்பாளி இலை சாற்றை கொடுக்கலாம். இது சாப்பிட்டு 3 மணி நேரத்திற்குள் இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
5. துளசி போன்ற பயனுள்ள மூலிகைகளை சாப்பிடுவதனால் காய்ச்சல் கட்டுக்குள் இருக்கும். காய்ச்சல் ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும். இது போன்ற நேரங்களில் பெருஞ்சீரகம், சீரகம், வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை தேநீருடன் கலந்து எடுத்து கொள்ளலாம். இவை தசை வலி மற்றும் மூட்டு வலியைப் போக்கும்.