வெளிநாட்டிலிருந்து புங்குடுதீவுக்கு போகும் அங்கிள்கள் தனிய ஊருக்கு வர தடையும் வரும் போது கண்டிப்பாக மனிஷிமாரையும் கூட்டிவரனும் என்னும் கட்டாய விதிமுறையும் விதிக்க வேண்டும்…
இங்கிருந்து போத்திலோட போய் அங்கிருக்கும் வெட்டிப்பயலுகளுக்கு சில்லறையை சிதறவிடுவதும்,அங்கிருக்கும் கிழடுகளை மாமா வேலை பார்க்க பண்ணிவதும்,தங்கள் வெள்ளைவேட்டி களவுகள் வெளியில் போயிடக்கூடாது என மாதம் மாதம் படியளப்பதுமாக ஊரை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியதில் 75% பங்கு வெளிநாட்டில் இருந்து தனியாக ஊருக்கு போய் வரும் அரைப்பழசுகள் தான்…
அங்கிருக்கும் பலரின் சிந்தனையெல்லாம் நமக்கு ஓசி சோறும் செலவுக்கு காசும் வந்தால் சரி எவன் எக்கேடு கெட்டுபோனாலும் அது பற்றி எந்த கவலையும் கிடையாது …
புங்குடுதீவில் இருக்கும் அமைப்புக்களும் அதேதான் வெளிநாட்டு காசுவாங்கி தங்களை வளர்ப்பதும் பேஸ்புக்கில மரம் வளர்க்கிறம் பசுமை புரட்சி செய்யிறம் என பீத்துவதுமாக கோயில் மாடுகளாக திரியுதுக,அவர்கள் தண்ணி தேவைக்கும் பாவிக்கும் கிணறு கூட அவ சேறு எடுக்கமாட்டீன அதுக்கு ஒரு புங்குடுதீவு வெளிநாட்டு அமைப்பு காசு அனுப்பி ஆள் பிடிச்சு விடனும் இப்படியிருந்தால் எப்படி உருப்படும் ஊர் எவன் வேலை வெட்டிக்கு போய் உழைக்கனும் என யோசிப்பான்….
அதை விட சர்வோதயம் என்னும் ஒரு அமைப்பு 50 வருடம் மேல அங்கு இருக்கு அரசாங்க உதவி,வெளிநாட்டு சங்கங்களின் உதவி ,வெளிநாட்டு தனிநபர்கள் உதவி என எல்லா நிதியும் போகுது ஆனால் அந்த அமைப்பு ஊருக்கு என்ன செய்தது என்றால் எதுவும் இல்லை இப்பவும் தண்ணி வித்து காசு பார்த்திட்டுத்தான் இருக்கு,அவக ஒரு தனி ராஜ்ஜியம் ஊர்ல எது நடந்தாலும் அந்தம்மா வாயே திறக்காது ஒரு கண்டனம் தெரிவிற்காது ஆனால் உலகம் பூரா கூப்பிட்டு சமூக சேவகி ஊருக்காக அற்பணிப்பு என பொன்னாடை எல்லாம் போர்த்தி அனுப்புறாங்க,தண்ணி பவுஷர் வெளிநாட்டு ஒன்றியம் வாங்கி கொடுக்கனும் ஆனால் பள்ளிக்குடத்துக்கு தண்ணிகேட்டால் காசு கேட்கிறாங்க என்றார் பவுஷர் வாங்கி கொடுத்தவையே…
இப்படி நிதியானந்தாவின் குட்டி கைலாஷாவாக ஆளாளுக்கு ஒரு வட்டார பிரிப்பு சிற்றரசு வாழ்க்கையாக புங்குடுதீவில் உள்ளவன் வாழ்வு பெரு வாழ்காக போகுது ..
விதானை முதல் வீணா போனவன் வரை அங்கு மணிதான் பிரச்சினை கூடவே மணியும் பிரச்சினை ஆதனால் முதல் யார் மணி கட்டுற என்னும் பிரச்சினை அங்கு கடும் பிரச்சினை.