போரில் கொல்லப்பட்ட 500க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்களின் உடல்களை ரஷ்யா திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன், ரஷ்யா போரில் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இருதரப்பில் இருந்தும், முதல் மாதத்தில் இருந்து உடல்கள் அனுப்பப்படுவதுடன் போர்க் கைதிகள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இதற்கமைய, 500க்கும் மேற்பட்ட வீரர்களின் உடல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொல்லப்பட்டவர்கள் உக்ரைன் வீரர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் இறந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், போர்க்கைதிகளின் சிகிச்சைக்கான கீவ்வின் ஒருங்கிணைப்பு தலைமையகம் கூறுகையில், ” போரில் கொல்லப்பட்ட 502 பாதுகாவலர்களின் உடல்கள் உக்ரைன் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
அதில் 397 உடல்கள் போர் தீவிரமான டொனெட்ஸ்க் பகுதியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளது
மேலும், கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து 24 பேரும், தெற்கு ஜபோரிஜியா பகுதியில் இருந்து 64 பேரும் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், 17 பேர் ரஷ்ய பிரதேசத்தில் உள்ள பிணவறைகளில் இருந்து திரும்ப ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், உடல்கள் தடயவியல் மருத்துவ பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும், நிபுணத்துவ நிறுவனங்களுடன் சேர்ந்து இறந்தவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் மையம் தெரிவித்துள்ளது.
எனினும், ரஷ்யா அதன் பங்கிற்கு அந்நாட்டு வீரர்களின் உடல்களை திரும்பப் பெறுவது தொடர்பில் எந்தவித அறிவிப்பும் விடுவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.