கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுக்கு கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சையளித்த தாதிய உத்தியோகஸ்த்தர் ஒருவர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்துள்ள நிலையில் அவருடன் சேர்த்து 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினால் நடத்தப்படும் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த நிலையில், அவர் அடையாளப்படுத்தப்பட்டு அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா நோய்த்தொற்று பரவியோரின் எண்ணிக்கை 101 ஆக உயர்வடைந்துள்ளது.
ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றி வருவோர் மற்றும் விடுமுறையில் ஊர்களுக்கு சென்றவர்கள் உள்ளடங்களாக இவ்வாறு 101 பேர் நோய்த்தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.