பிரான்சில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவி வரும் நிலையில், பாரிஸில் நாளை முதல் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, முதற் கட்டமாக நாளை முதல் பாரிஸிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவிவருகின்றது.
தற்போது வரையில் உலகம் முழுவதும் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன நிலையில், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸில் இதுவரையில் 624,274 பேர் கொரோ தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 32,299 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையிலேயே, பாரிஸ் நகரில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உணவகங்களுக்கு வரும் நபர்களை தடம் அறிய அவர்களது தகவல்களை சேகரித்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறான உணவகங்கள் அதிகபட்சம் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் மக்களுக்கு சிரமத்தினை ஏற்படுத்தும் என்றும் ஆனால், வேறு வழியின்றி இதனை கடைப்பிடித்துதான் ஆக வேண்டும் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் தெரிவித்துள்ளார்.