இன்றைய காலத்தில் பல பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையிலிருந்து சிக்கி தவித்து வருகின்றார்கள்.
ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு காரணம் அவர்களது உடலில் ஏற்படும் ஹார்மோன் சுரப்புகள் தான். ஹார்மோன் சமநிலையின்றி இருக்கும் போது கருமுட்டையில் பாதிப்பை உண்டாக்கும்.
இதை கவனியாவிட்டால் திருமணத்துக்குப் பிறகு கருத்தரித்தலில் பிரச்னை உண்டாகும்.
இதனை நிவர்த்தி செய்ய ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவது நல்லது. அந்தவகையில் தற்போது ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையிலிருந்து விடுபட உதவும் சில உணவுகளை தற்போது பார்ப்போம்.
- வைட்டமின்-சி நிறைந்த பழங்களில் ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி மற்றும் மாம்பழம் ஆகியவை விட்டமின் சி நிறைந்த பழங்களை சாப்பிடலாம்.
- மாதவிடாய் காலங்களைத் தூண்டுவதற்கு ஒரு தேக்கரண்டி தேனுடன் அரைத்த இஞ்சியை நீங்கள் வைத்திருக்கலாம். மேலும் ஒழுங்கு முறையற்ற மாதவிடாய் காலங்களை எதிர்கொள்ளும் போது, நீங்கள் போதுமான இஞ்சியை உட்கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- மாதவிடாய் பிரச்சனைகளை குறைக்க மஞ்சளை உணவில் சேர்த்து கொள்ளவும். தவறாமல் குடிக்க வேண்டும்.
- வெல்லத்தை இஞ்சி, எள், மஞ்சள் மற்றும் கொத்தமல்லி விதைகளுடன் கலந்து ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீருடன் அதனை மென்று சம்பிட வேண்டும்.
- பீட்ரூட் இரும்பு, கால்சியம் மற்றும் ஃபோலிக் அமிலத்தின் சக்தியாகும். இந்த காய்கறி, பெண்கள் பொதுவாக மாதவிடாய் காலங்களில் அனுபவிக்கும் நீர் தக்கவைப்பு மற்றும் வீக்கத்தை குறைக்கும். அதேபோல இதனுடன் கேரட் சேர்த்து சாப்பிடுவதும் நல்லது.
- ஒரு நெல்லிக்காய் 10 ஆப்பிள்களுக்குச் சமம் என்று சொல்வார்கள். அதில், விட்டமின் சி இருப்பதால் இரும்பு சத்தினை உறிஞ்ச உதவும். நெல்லிக்காயை முதல் நாள் தேனில் ஊறவைத்து, மறுநாள் உண்ணலாம். மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது.
- மாதவிடாய் பிரச்சனைக்கு வெந்தயம் சாப்பிடலாம். அதில், குளூகோஸ் மெட்டபாலிசம் தன்மை உள்ளது. நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், ஹார்மோனை ரெகுலேட் செய்ய பயன்படும்.
- ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, தேன் கலந்து குடிக்கலாம். இதில் Anti-inflammatory, Anti-diabetic, ஈஸ்ட்ரோஜன் போன்றவை இருப்பதால், உடலிலும் கர்ப்பப்பையிலும் இருக்கும் அழுக்குகளை நீக்கப் பயன்படுகிறது.
- எள்ளுருண்டை மற்றும் கருப்பு எள்ளுருண்டை மிகவும் நல்லது. இதில் இருக்கும் நல்ல கொழுப்பு, கால்சியம், மெக்னீஷியம் போன்றவை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்கவும், எலும்பை உறுதி செய்யவும் பயன்படும். மேலும், இது உடல் எடையையும் சரி செய்யும்.
- பேரீச்சை, உலர்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, கருவேப்பிலை ஜூஸ், அகத்திக்கீரை, சுண்டக்காய் ஆகியவற்றை உண்பதன் மூலம் இதனைச் சரி செய்யலாம். இருப்பினும், இந்த உணவுகளை சாப்பிடுவது மாதவிடாய் காலங்களை தூண்டுவதற்கு மட்டுமே உதவக்கூடும்.