உங்கள் இரத்த சர்க்கரையை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால், அது சிறுநீரகத்திலிருந்து இதயம், தோல், கண்கள் என அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். நீரிழிவு நோய்க்கு எதிரான சில ஆயுர்வேத இலைகளின் பண்புகள் பற்றி நாம் இங்கு பார்போம்.
வெந்தயம் இலைகள்
வெந்தய இலைகள் ஆயுர்வேத பண்புகள் நிறைந்தவை, எனவே அவற்றின் நுகர்வு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயண் தரும். இதன் இலைகள் அல்லது விதைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க பெரிதும் உதவும்.
கறிவேப்பிலை
நீரிழிவு நோயாளிகளுக்கு கறிவேப்பிலை பயனுள்ளதாக இருக்கும். கறிவேப்பிலையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது மற்றும் நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்கும், எனவே இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
அஸ்வகந்தா இலைகள்
அஸ்வகந்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மூலிகையாகும். இதன் இலைகள் நீரிழிவு நோய்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மா இலைகள்
பெக்டின், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த மா இலைகள் உயர் இரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது.
வேப்ப இலைகள்
வேப்ப இலைகள் கசப்பானவை, ஆனால் அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். வேப்ப இலைகளை தவறாமல் உட்கொள்வது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.