வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள் இடம்பெறுவதாகவும் அதற்கு பொலிஸாரும் உடந்தை என பொதுமக்கள் தெரிவிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
6 பேர் கைது
இதனை அடுத்து மோசடி தொடர்பில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைவாக செயல்பட்ட தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தன் தலைமையிலான குழுவினருடன் இன்று புதன்கிழமை (24) அதிகாலை வவுனியா கடவுச்சீட்டு காரியாலயத்திற்கு சென்றிருந்தனர்.
இதம்போது மோசடிகளில் ஈடுபட்டுவருபவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரணை மேக்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் நாட்களில் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஏதேனும் மோசடிகள் இடம்பெறுமாயின் பொதுமக்கள் தனது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கமான 0718593520 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் கூறியுள்ளார்.