கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதிகளில் இன்று மாலை ஆறு மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே இன்று மாலையில் இருந்து மீளவும் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரையில் குறித்த தொழிற்சாலையில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியர்களின் எண்ணிக்கை 569 என உறுதி செய்யப்பட்டுள்ளது.