ஆவா குழுவின் தலைவர் வினோதனின் வீட்டின் மீது, தனுறொக் குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இன்று மதியம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இணுவில் பகுதியில் உள்ள ஆவா வினோதனின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், தொலைக்காட்சி பெட்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் எரித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக, சுன்னாகம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.