நடிகர் கார்த்தி மீண்டும் அப்பா ஆகப் போகிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியானதில் இருந்து ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
கார்த்திக்கும், ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சனி சின்னசாமிக்கும் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி திருமணம் நடந்தது.
ரஞ்சனி கடந்த 2013ம் ஆண்டு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அந்த குழந்தைக்கு உமையாள் என்று பெயர் வைத்தனர். இந்நிலையில் ரஞ்சனி லாக்டவுனின்போது இரண்டாவது முறையாக கர்ப்பமானார்.
தற்போது கார்த்தி மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் தம்பி. ஜீத்து ஜோசப் இயக்கிய அந்த படத்தில் கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தியின் அண்ணனான சூர்யாவுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் இருக்கிறார்கள். கார்த்திக்கு ஒரேயொரு மகள் மட்டும் தான் இருக்கிறார். ஒரு குழந்தை மட்டும் போதும் என்று நினைத்துவிட்டார் போன்று என்றார்கள் ரசிகர்கள். இந்நிலையில் கார்த்தி மீண்டும் அப்பா ஆகப் போகிறார்.
முதல் பிள்ளையை போன்றே இரண்டாவது பிள்ளைக்கும் தூய தமிழில் தான் பெயர் வைப்பார் கார்த்தி என்று நம்பப்படுகிறது.