இங்கிலாந்திலிருந்து கழிவுப்பொருள்கள் அடங்கிய கொள்கலன்களை இலங்கைக்கு அனுப்பிய இங்கிலாந்து நிறுவனத்திடம் இழப்பீடு கோரி இலங்கை வழக்கு தாக்கல் செய்துள்ளது.
அபாயகரமான கழிவுகளின் எல்லைப்புற இயக்கங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அவற்றை அகற்றுவது தொடர்பான பாஸல் மாநாட்டின் கீழ் 1.694 பில்லியன் இழப்பீடு கோரப்பட்டுள்ளது.
இலங்கை கடந்த மாதம் 21 குப்பைக் கொள்கலன்களை ஐக்கிய இராச்சியத்திற்கு திருப்பி அனுப்பியிருந்தது.
இந்த 21 கொள்கலன்கள் இங்கிலாந்தில் இருந்து 2017 ல் சட்டவிரோதமாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட 263 கொள்கலன்களின் ஒரு பகுதியாகும்.
21 கொள்கலன்கள் SEAMAX NORWALK (V / 039R) கப்பலில் ஏற்றப்பட்டு மீண்டும் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டன.
242 கொள்கலன்கள் தொடர்பாக தற்போது நீதிமன்ற வழக்கு நடந்து வருகிறது. அவற்றில், 112 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திலும், 130 கட்டுநாயக்கவிலும் உள்ளன.
உலோக மறுசுழற்சிக்கான பொருட்கள் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து கொழும்பு துறைமுக அதிகாரிகள் நடத்திய சோதனையில் மெத்தை, பிளாஸ்டிக் மற்றும் மருத்துவமனை கழிவுகள் கலந்திருந்தது தெரிய வந்திருந்தது.



















