தமிழ் சினிமாவின் மாரி 2 படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் தான் மலையாள நடிகர் டொவினோ தாமஸ்.
தற்போது, ‘கள’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக எர்ணாகுளம் அருகே உள்ள பிறவம் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த 2 நாட்களாகச் சண்டைக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வந்தன. நேற்று டொவினோ தாமசின் வயிற்றில் வில்லன் மிதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து, உடனடியாக அவரை கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குப் பரிசோதித்த போது வயிற்றுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைனால், டொவினோவை உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.




















