பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி பெயரில் உள்ள 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறை கூறியுள்ளதாவது, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், சசிகலா, சுதாகரன், இளவரசி பெயரில் உள்ள 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட் சொத்துகளை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு சசிகலாவின் சுமார் ரூ.1500 கோடி மதிப்புள்ள சொத்தும், கடந்த மாதம் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் வீடு உள்ளிட்ட 300 கோடி மதிப்புள்ள சொத்தும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சசிகலா சிறையில் இருந்து அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன் விடுதலையாவார் என கூறப்பட்டு வரும் நிலையில் அவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது விவாத பொருளாக மாறியுள்ளது.



















