புதிய பொலிஸ் பேச்சாளராக பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹான நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னர் பேச்சாளராக செயற்பட்ட அஜித் ரோஹன, பின்னர் பொலிஸ் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வந்தார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் விடுதலை குறித்து, பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனரத்ன ஊடகங்களுக்கு அளித்த பேட்டி, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளதால் பொலஸ் பேச்சாளர் மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட ரியாஜ் பதியுதீனின் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜாலிய, அவர் தற்கொலைதாரிகளுடன் தொடர்பிலிருந்தது உறுதியானதாக தெரிவித்தார். எனினும், ரியாஜ் பதியுதீன் மீது எந்த குற்றச்சாட்டு ஆதாரமும் இல்லாததால் விடுவிக்கப்பட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, ரியாஜ் பதியுதீன் குறித்து பொலிஸ் பேச்சாளர் கூறிய கருத்துக்கள் முறையற்றவை என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.