செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செவ்வாய் கிரகத்தின் தென்துருவதத்தில் தரைக்கு அடியில் புதைந்த நிலையில் ஏறி ஒன்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பத உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் அடுத்தடுத்தக்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் நிலத்துக்கு அடியில் ஏரி புதையுண்டு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் பனி படிவத்துக்கு அடியில் புதையுண்ட நிலையில் ஏரி இருப்பதாக இத்தாலி ரோம் நகரில் அமைந்துள்ள ரோமாடிரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். தற்போது இதை உறுதிப்படுத்தும்படியான தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் அஸ்ட்ரானமி என்ற அறிவியல் இதழில் வெளியாகி இருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற செவ்வாய் கிரக ஆய்வு விண்கலத்தை ஆய்வு பணியில் ஈடுபடுத்தியது. 2012 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஏணைய தரவுகள் சேகரிக்கப்பட்டது. இதில் மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் என்ற இருந்து ரேடியோ அலைகளை நிலப்பரப்புக்குள் ஊடுருவச் செய்து ஆய்வு செய்தனர். இதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பிரதிபலிப்பு காணப்பட்டது. அந்த இடத்துக்கு அடியில்தான் திரவ நிலையில் ஏரி இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர்.
செவ்வாய் கிரகத்தில் இதுவரை பனிக்கட்டி வடிவாக இருந்த நிலையில் ஏரி திரவ நிலையில் இருக்கிறது என்பது வியக்கத்தக்கதாக உள்ளது. இந்த ஏரியானது 30 கிலோமீட்டர் வரை குறுக்களவு கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து 2019 ஆம் ஆண்டு வெளியான தகவல்கள் குறித்து பார்க்கையில் எரிமலை தண்ணீரை உறைய வைக்காமல் பார்த்துள்ளது எனவும் மிக மிக அதிகமான உப்புத் தன்மையே தண்ணீரை உறையச் செய்யாமல் வைத்துள்ளது என தெரிவித்தனர்.
சமீபத்தில் செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்திற்கு அருகில் உள்ள நிலத்துக்கு அடியில் மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2018-ம் ஆண்டு ஆய்வு ஒன்றின்போது சுட்டிக்காட்டப்பட்ட நான்காவது ஏரி ஒன்றின் இருப்பையும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏரிகள் அனைத்தும் மிகவும் உப்பத்தன்மை வாய்ந்தவை என்று கருதப்படுவதால், இது நுண்ணுயிரிகளின் உயிர் வாழ்தல் கேள்விகளை எழுப்பியுள்ளது, அதாவது மெல்லிய வளி மண்டலம் என்று கூறப்படும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நிலையில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
2018-ம் ஆண்டு நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த தகவலை உறுதிசெய்தது மட்டுமின்றி, மூன்று பிரகாசமான பகுதிகளையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம் என இந்த ஆய்வு குழுவை சேர்ந்தவரும் இத்தாலியின் ரோமோ ட்ரோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான எலெனா பெட்டினெல்லி கூறியுள்ளார்.