பிரித்தானியாவின் மேற்கு லண்டன் பகுதியில் இளம் தமிழ் தம்பதியினரினதும், அவர்களின் 3 வயது மகனினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று அதிகாலை 1 மணிக்கு முன்னதாக ப்ரெண்ட்ஃபோர்டு ஷார்டியில் உள்ள கிளேபாண்ட்ஸ் லேனில் உள்ள நவீன டவர் பிளாக்கில் மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஸ்கொட்லாந்து யார்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மலேசிய கோலாலம்பூரைச் சேர்ந்த இத் தம்பதிகள் திருமணத்தின் பின்னர், பிரித்தானியாவில் குடியேறி இருந்தார்கள்.
பூட்டப்பட்ட வீட்டுக்குள் தம்பதியினரிற்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அது குறித்து அயலவர்கள் பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.
தன்னை தானே குத்தினார் கொலையாளி குகா சிவராஜ்
நேற்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு லண்டன் Brentford, நடந்த சம்பவம் பலரை அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
36 வயதான மனைவி பூரணா காமேஷ்வரியையும், 3 வயதே ஆன மகன் கைலாஷ்ஷையும் குகா சிவராஜ் குத்திக் கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து பொலிசார் அங்கே சென்றவேளை குகா கதவை திறக்கவில்லை, சில நிமிடங்களின் பின்னர் பொலிசார் கதவை தட்டிய போதும் திறக்கவில்லை.
இறுதியாக பொலிசார் கதவை உடைத்து உள்ளே செல்ல முற்பட்டவேளையே, தன்னை தானே குகா கத்தியால் குத்தியுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிசார் குகாவின் உயிரைக் காப்பாற்ற போராடிய போதும் முடியவில்லை, அவர் உடனே இறந்து விட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவர்களது வளர்ப்பு நாயைக் கூட கொலையாளி கொலை செய்து விட்டதாக கூறப்படுகிறது.
மனைவி பூர்ணா – மகன் கைலாஷ் சடலங்கள் இரு வாரங்களிற்கு மேல்
இதேவேளை கடந்த செப்டெம்பர் மாதம் நடுப்பகுதியில் தனது மனைவியையும், பிள்ளையையும் சிவராஜ் கொலை செய்து இருக்க வேண்டும், குறித்த உடல்கள் 2 வாரங்களான நிலையில் உள்ளதாக பிரித்தானியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மூன்று வயது சிறுவனான கைலாஷ், தாதியிடம் சில பரிசோதனைகளுக்கு வாராந்தம் செல்வது வழமை ஆனால் கடந்த மூன்று வாரங்களாக செல்லவில்லை என குறித்த தாதி விசாரணைகளின் போது குறிப்பிட்டுள்ளமையும் சுட்டிக் காட்டத் தக்கது.
வழமையாக மனைவியுடன் இரவில் கூச்சல் சத்தம் இட்டு சண்டை இடுவது குகாவின் வழக்கம், ஆனால் கூச்சல் சத்தத்தில் இரு வாரங்களிற்கு மேல் ஆண் குரல் மட்டுமே கேட்டுள்ளது, அதனால் சந்தேகமடைந்த அயலவர் ஒருவர் கொடுத்த தகவலை அடுத்து பொலிசார் குறித்த இடத்திற்கு உடன் விரைந்துள்ளனர்.
சந்தேகத்தில் குறித்த இடத்திற்குச் சென்ற பொலிசாருக்கு குகா கதவை திறக்காததால் கதவை உடைத்துள்ளார்கள்.
அந்த வேளை தான் குகா தன்னை தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்துள்ளார்.
ஆனால் உள்ளே இருந்த மனைவி மற்றும் மகன் ஆகியோரின் உடல்கள் சுமார் 2 வாரம் பழையது என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் குழப்பகரமான கொலையாக இருப்பதாகவும், இரவில் தனியாக குகா கூச்சலிட்டு, சண்டை பிடித்து வந்ததால், இறந்த உடல்களுடனா குகா சண்டையிட்டார் எனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.