தற்போது ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளை தவிர, வேறு எந்த பிரதேசத்திலும் வார இறுதியில் ஊரடங்கு உத்தரவை அமுல்ப்படுத்தும் எந்த திட்டமும் இல்லையென கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPC) அறிவித்துள்ளது.
அந்த மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறுகையில், திடீரென ஏராளமான கொரோனா தொற்றாளர்கள் கண்டறிப்படா விட்டால், நாடு முழுவதும் ஊரடங்கை அமுல்ப்படுத்தும் அவசியம் இருக்காது என்றார்.
நாட்டில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மட்டுமே வார இறுதி லொக் டவுன் அல்லது பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடரும்.
இதேவேளை, மினுவாங்கொட கொரோனா பரவல் எவ்வளவு தூரம் பரவியது என்பது குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.