யாழ்ப்பாணத்திலுள்ள ரௌடிகளை வழிநடத்தும் பிரான்ஸ்வாசி ஒருவரைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் ரௌடியொருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் வைத்து நேற்றுவிசேட அதிரடிப்படையினரால் ரௌடி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியின் முன்பாக பிரபல ரௌடி தனுரொக்கை விரட்டி விரட்டி வெட்டிய விவகாரத்தில் கைதாகியுள்ள இன்னொரு ரௌடியின் வீட்டின் முன்பாகவே குறித்த சந்தேக நபர் கைதானார்.
அவரது கைத்தொலைபேசியை ஆராய்ந்தபோது பிரான்ஸிலுள்ள ஒருவர் இந்த தாக்குதல்களை நெறிப்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்தாக கூறப்படுகின்றது.
இதேவேளை யாழில் இயங்கிய முன்னாள் ரௌடியொருவரே தற்போது பிரான்ஸிலிருந்து இந்த குழுக்களை இயக்குகிறதாகவும் கூறப்படுகின்றது.
பெருமாள் கோயிலடி வாள்வெட்டை தொடர்ந்து இணுவில், உடுவில், ஓட்டுமடம், நீர்வேலியுள்ள வீடுகள் மீது தனுரொக் குழு என நம்பப்படும் குழு தாக்குதல் நடத்தியது.
மேலும் வாள்வெட்டுடன் தொடர்புடைய நபர்களின் வீடுகள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.