மொனராகலை – மெதகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் நேற்று (08) உயிரிழந்துள்ளதாக மொனராகலை மருத்துவமனை பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் மொனராகலை – பொல்கல்ல – வல்கொல்ல பகுதியில் வசிக்கும் 70 வயதுடைய ஏ.என். லோகு பண்டா என தெரியவந்துள்ளது.
குறித்த நபரின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த பெண்ணின் உறவினர்கள் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (08) இரவு 7.00 மணியளவில் நோய் வாய்ப்பட்ட 70 வயதான நபர் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.
இவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய மாதிரிகள் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த நபரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வரும் வரை உடல் சீல் வைக்கப்பட்டு சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.