உலகம் முழுவதிலும் கொரோனாவில் இருந்து 2 கோடிக்கும் மேல் குணமடைந்துள்ள நிலையில், இந்தியா உலக அளவில் கொரோனாவில் இருந்து அதிக குணமடைந்தோர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது குறித்து பெரிய அளவில் உலக நாடுகள் எடுத்து கொள்ளாவிட்டாலும், அதன் பின் இந்த கொடிய வைரஸின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை கண்டு பல்வேறு நாடுகள் அஞ்சின.
இதனால் இந்த நோயின் தாக்கம் தங்கள் நாடுகளில் பரவிவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தற்போது வரை உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸை தடுப்பதற்கு, தடுப்பு மருந்துகள கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 76 லட்சத்தை தாண்டியுள்ளது.
குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 83 ஆயிரத்து 11 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 2 கோடியே 76 லட்சத்து 29 ஆயிரத்து 679 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தற்போது கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் அடுத்தடுத்து உள்ளன.
- இந்தியா – 58,27,705
- அமெரிக்கா – 50,16,139
- பிரேசில் – 44,14,564
- ரஷியா – 10,02,329
- கொலம்பியா – 7,77,658
- பெரு – 7,28,216
- அர்ஜெண்டினா – 6,84,844
- தென் ஆப்ரிக்கா – 6,18,771