மினுவங்கொட பிரென்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த இருவர் உள்ளிட்ட 103 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 02 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் எனவும் ஏனைய 101 பேர் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலில் சிக்கிய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,186 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது வரை நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,626 ஆக பதிவாகியுள்ளதுடன் குணமடைந்தவர்களின் தொகையும் 3,306 ஆக காணப்படுகிறது.
1,307 கொரோனா தொற்றாளர்கள் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 341 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே செப்ரெம்பர் 23ம் திகதிக்கு பின்னர் பிரன்டிக்ஸ் தொழிற்சாலை ஊழியர்களை சந்தித்தவர்களை பிசிஆர் பரிசோதனையை செய்துகொள்ளுமாறு இராணுவ தளபதி சவேந்திரசில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.